சூப்பர் டீலக்ஸ்
திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவதும், வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத அளவிற்கு கதை நகர்கிறது. ஆபாச படம் பார்க்கவேண்டும் என்று தயாராகின்றனர் ஒரு 5 சிறுவர்கள், இச்சிறுவர்களுள் ஒருவனின் தாயான, ஆபாச படத்தின் நாயகியாக தொலைக்காட்சியில் காட்சி தர, இதை கண்ட ரம்யா கிருஷ்ணனின் மகன் கோபத்துடன் தொலைக்காட்சியை உடைத்துவிட்டு தன அம்மாவை கொல்வதற்கு புறப்படுகிறான். திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர் சமந்தா மற்றும் பஹத் பாசில், இதில் சமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், இவ்விசயமானது கணவன் பஹத் பாசிலுக்கு தெரியவருகிறது. பின்னர் சமந்தா தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்பிணத்தினை அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர்கள் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றனர்.
- ஆண்டு: 2019
- நாடு: India
- வகை: Comedy, Thriller, Drama, Crime
- ஸ்டுடியோ: Tyler Durden And Kino Fist, Alchemy Vision Workz, East West Dream Works
- முக்கிய சொல்: dark comedy
- இயக்குனர்: Thiagarajan Kumararaja
- நடிகர்கள்: Vijay Sethupathi, பஹத் பாசில், சமந்தா ருத் பிரபு, Ramya Krishnan, Mysskin, Gayathrie Shankar